தமிழகத்தின் சாபக்கேடு

நாம் நியாயமான, அடிப்படையான நமதுரிமைகள் பேசினால் கூட அது யாரோ ஒருவர்க்கு எதிர் குற்றச்சாட்டு ஆகிறது

நாம் வணங்கும் கடவுளை எம் தாய்மொழியில் தொழவேண்டுமென்றால்
அது வடமொழிக்கு எதிராகிறது.
எம் தாய்மொழியில் எமக்குப் பொருள் புரியும் இசை வேண்டுமென்றால்
அது தெலுங்குக்கு எதிராகிறது.
எம் மாநிலத்தில் மைய அரசு அலுவலகங்களிலும் மக்களுக்குப் புரியும் வகையில் எம் தாய்மொழியில் ஆட்சி நடைபெற வேண்டுமென்றால்
அது இந்திக்கு எதிராகிறது.
எம் தாய்மொழியில் கல்வி வேண்டுமென்றால்
அது ஆங்கிலத்திற்கு எதிர் என்கிறார்கள்.
குறளின் பெருமை பேசினால்
அது கீதைக்கு எதிர் என்கிறார்கள்.
பேரா.வா.செ.குழந்தைசாமி


எங்கள் தமிழ்

இனிமைத் தமிழ் மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்த நல் அமுது!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில்!
தமிழ் எங்கள் உயிர்என்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவிமேலே!

சங்கநாதம்

சங்க நாதம்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
பாரதிதாசன்

காந்திஜியின் பொன்மொழிகள்

என்னைக் கவர்ந்த காந்திஜியின் பொன்மொழிகள்

“உங்கள் பள்ளி உண்மையிலேயே ஒரு மாதிரிப் பள்ளியாக
விளங்க வேண்டுமானால் நீங்கள் மாணவர்களுக்குக் கல்வி
புகட்டினால் மட்டும் போதாது. மாணவர்களைச் சிறந்த
சமையல்காரராகவும், துப்புரவுப் பணியாளர்களாகவும்
உருவாக்க வேண்டும்”.

“மக்களுடைய சுகாதாரத்தின் துலாக்கோல் அவர்கள்
பயன்படுத்தும் கழிப்பறைதான்”

“போரில் வீர தீரச் செயல்களுக்காக அளிக்கப்படும்
பதக்கத்தைக் காட்டிலும் ஒரு சிறந்த துப்புரவுப்
பணியாளன் என்பதற்கான பதக்கம்தான் சிறந்தது”

“நீங்களே கைகளில் துடைப்பத்தையும் வாளியையும்
தூக்காதவரை உங்களது நகரங்களும், கிராமங்களும்
அசுத்தமாகத்தான் இருக்கும்”

“கழிப்பறை சுத்தம் செய்வது போன்ற பணிகளே நாட்டை
சுயாட்சிக்கு இட்டுச் செல்லும்”

Photo Gallery