எடிசனின் தொழிற்சாலை








எடிசனின் கண்டுபிடிக்கும் தொழிற்சாலை

அமெரிக்காவின் நியூ ஜொ்ஸி மாகாணத்தில் இருந்த எடிசனின் கண்டுபிடிப்பு தொழிற்சாலையில் (Invention Factory) மொத்தம் பதினான்கு தொழிற்கூடங்கள் இருந்தன. சுமார் ஐயாயிரம் பேர் வேலை செய்து வந்தார்கள். அதில் முதன்மைத் தொழிற்சாலை மட்டும் மூன்று கால்பந்து மைதானம் அளவுக்குப் பெரியது. “பல ஆயிரம் அமெரிக்க டாலர்களை மூலதனமாகப் போட்டுத் தொடங்கப்பட்ட தொழிற்சாலை இது. அதனால் பத்து நாளைக்கு ஒரு புதிய கண்டு பிடிப்பு உற்பத்தி செய்தே ஆகவேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு பெரிய கண்டுபிடிப்பு உற்பத்தி செய்யப்பட வேண்டும்” என்று எடிசன் இலக்கு நிர்ணயித்துக் கொண்டார் .
இதுவே அவரின் கண்டுபிடிப்பு சாதனைகளுக்கு காரணமாக அமைந்தது. நாம் ஆறு மாதங்களுக்குள் அல்ல நம் வாழ்நாளில் இறப்புக்கு முன்னாவது பலவற்றைச் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொள்வோமா? (நன்றி - விகடன் பிரசுரம்)

Photo Gallery